2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - 64 வயதான மூதாட்டி செய்த செயல்
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 64 வயது மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு புகார்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் 64 வயதான ரோசெல் ஸ்டீவர்ட் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் கடந்த புதன்கிழமை தனது வீட்டில் திருட்டு நடப்பதாக கூறி பிட்ஸ்பர்க் காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளார்.
காவல்துறையினர் அவரது வீட்டிற்கு வந்த போது, 12 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்கள் போதையில் இருந்துள்ளனர். திருட்டு புகார் தொடர்பாக காவல்துறையினர், ரோசெலிடம் கேள்வி எழுப்பிய போது அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
பாலியல் தொல்லை
இதன்பின்னர் சிறுவர்கள் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில், இருவரும் ஒரே பதிலை அழைத்துள்ளனர். தனது வீட்டு வாசலில் உள்ள பனியை சுத்தம் செய்தால் 5 டாலர்கள் தருவதாக கூறியுள்ளார்.
அவர்கள் பனியை சுத்தம் செய்து முடித்தவுடன் ஹாட் சாக்லேட் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து மது வழங்கியுள்ளார். அதன் பின்னர் அவர்களின் அருகே அமர்ந்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதை ஒரு சிறுவன் வீடியோ பதிவு செய்துள்ளான்.
இதனையடுத்து, சிறுவர்களுக்கு மது வழங்கியது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, பொய்யான திருட்டு புகார் அளித்தது என ரோசெல் மீது பல்வேறு வழக்குகளில் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.