‘ஒன்ஸ் எ லயன்..ஆல்வேஸ் எ லயன் .. 62YearsOfKamalism ரத்தம் தெறிக்கும் வாளுடன் விக்ரம் பட புது ஸ்டில்!
நடிகர் கமல் ஹாசன் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 62 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அவர் நடித்து வரும் விக்ரம் படக்குழுவினர் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வரும் படம் விக்ரம் இதில் கமல் ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை நிறைவு செய்து திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் மும்முரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விக்ரம் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். அதே நேரத்தில் படத்தில் கதாநாயகி யார் என்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் கமல் ஹாசன் நடிக்க வந்து 62 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, விக்ரம் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘ஒன்ஸ் எ லயன், ஆல்வேஸ் எ லயன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Keep inspiring us sir ?#62YearsOfKamalism pic.twitter.com/Sr4PH6vNZd
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 11, 2021
தற்போது விக்ரம்படக்குழுவினர் வெளியிட்டுள்ள 62YearsOfKamalism போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகிறது.