இந்தியாவில் கொரோனாவால் 62 பத்திரிகையாளர்கள் உயிரழந்துள்ளனர் - அதிர்ச்சியளிக்கும் அறிக்கை
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று அதிகபட்சமாக ஒரே நாலில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை இந்தியா முழுவதும் 62 பத்திரிகையாளர்கள் கொரோனாவால் உயிரழந்துள்ளனர் என்கிற அதிர்ச்சிகரமான தகவலை ஸ்வீடனைச் சேர்ந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலக அளவில் பத்திரிகையாளர்கள் மரணத்தில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பிரேசில் உள்ளது, அங்கு 170 பத்திரிகையாளர்கள் கொரோனாவால் உயிரழந்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிற நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்கிற கவலையளிக்கக்கூடிய தகவலையும் தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையாளர்களையும் முன்கள பணியாளர்களாக கருதி அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பத்திரிகையாளர்களுக்கும் முன்கள பணியாளர்கள் பிரிவின் கீழ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது