வெள்ள பாதிப்பு - 6000 ரூபாய் நிவாரணம்..! முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!
மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்த பின் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பு
அப்போது பேசிய அவர், மழை பாதிக்கப்பட்ட இடங்களை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை காத்து போல இங்கும் தமிழக அரசு பாதுகாக்கும் என்ற அவர், வானிலை ஆய்வு மையம் கூறியதை விடவும் அதிகளவு பெய்துள்ளது என்று குறிப்பிட்டார்.
ஒரே ஆண்டிற்கான மழை ஒரே ஆண்டில் பெய்ததால் பெரும் பாதிப்புகள் உண்டானதாக குறிப்பிட்ட அவர், அதன் காரணமாக பல இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை நமக்கு காலதாமதாகவும் கிடைத்த நிலையில், மழை பொழிவு நின்ற உடனே 10 அமைச்சர்கள் மீட்பு பணியில் களமிறக்கப்பட்டனர்.
நாட்டின் பிரதமரை டெல்லியில் சந்தித்து தென்மாவட்டத்திற்கு மட்டும் 2000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிட்ட அவர், மீட்புபணிகளை மேற்கொள்ள மேலும் ஹெலிகாப்டர்கள் வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டார்.
6000 ரூபாய் நிவாரணம்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் 5 லட்சமாகவும், குடிசை இழந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், 33% அதற்கு மேல் பதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றிற்கு 17 ஆயிரம் ரூபாயும், மானாவாரி பயிர்களுக்கு 8500 ரூபாய், எருது பசு கால்நடை உயிரிழப்பிற்கு 37500 ரூபாயும், வெள்ளாடு செம்மறி உயிரிழப்பிற்கு 4000 ரூபாயும், சேதமடைந்த படகுகளுக்கு 32 ஆயிர ரூபாயில் இருந்து பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், முழுவதுமாக சேதமடைந்த மோட்டார் படகுகளுக்கு 7 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதிகனமழை காரணமாக பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண நிதியாக 6000 ரூபாயும், கன்னியாகுமரி, தென்காசி பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதிகளுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.