30 வயது பெண்ணை கரம் பிடித்த 60 வயது முதியவர்; பெண் வீட்டாருக்கு ஓகே - அதான் காரணமா?
30 வயது இளம்பெண்ணை 60 வயது முதியவர் திருமணம் செய்துள்ளார்.
இளம் பெண்ணுடன் திருமணம்
கர்நாடகா மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் ப்பேகவுடனஹள்ளி கேட் பகுதியை சேர்ந்தவர் 60 வயதான எரண்ணா. அதிகளவில் நிலம் வைத்துள்ளார். இவரது மனைவி முதுமை காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் எரண்ணாவை கவனித்துக்கொள்ள அவரின் மகன் மற்றும் மகள் மறுத்துள்ளனர். இதனால் வயதான காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று நினைத்த எரண்ணா,இன்னொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொள்ள தயாரானார்.
இதற்காக பெண் பார்க்கும் படத்தில் ஈடுபட்ட எரண்ணாவுக்கு தன்னை விட 30 வயது குறைந்த, மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த அனு என்ற இளம்பெண் கிடைத்தது. அந்த பெண்ணின் பெற்றோரும் தங்கள் மகளை எரண்ணாவுக்கு 2வதாக மணம் முடித்துக் கொடுக்க சம்மதம் தெரிவித்தனர்.
இணையவாசிகள் விவாதம்
இதனை தொடர்நது இருவருக்கும் அப்பே கவுடனஹள்ளி கேட் பகுதியில் உள்ள பயல் ஆஞ்சநேயா சாமி கோவிலில் நேற்று திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர் எரண்ணா, அனு கழுத்தில் தாலி கட்டினார்.
இதில் இருவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களின் திருமண செய்திகள் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில் இணையவாசிகள் சில பேர் எரண்ணாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சில பேர் இதனை ருசிகர விவாதமாக பேசிவருகின்றனர்.