இளம் பெண்களை திருமணம் செய்து குழந்தை பெற்ற உடன் விவாகரத்து செய்யும் முதியவர் - 100 திருமணங்கள் செய்ய திட்டம்
தனது வாழ்நாளில் 100 பெண்களை திருமணம் செய்வதே தனது இலக்கு என 60 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.
நூறு திருமணம்
பாகிஸ்தானை சேர்ந்த முதியவர் ஒருவர் பேசியுள்ள வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.இந்த வீடியோவினை ஜீத் என்ற ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது, அந்த வீடியோவில், திருமணம் தொடர்பான தனது எண்ணங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் முதியவரை ஒருவர் பேட்டி எடுக்கிறார். அந்த வீடியோவில் 60 வயது முதியவரும் தனது இளம் வயது மனைவிகளுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
Pakistan में ये चिचाजान 26 शादियाँ करके 22 लड़कियों को तलाक़ दे चुका है…कह रहा है कि ये मेरा शौंक है…100 शादियाँ करूँगा…सबको तलाक़ दूँगा… pic.twitter.com/YHPk09PXRa
— Jyot Jeet (@activistjyot) February 17, 2023
தற்போது, அவருக்கு மொத்தம் 4 மனைவிகள் உள்ளனர். அவர்களின் வயது 19-20 வயதுக்கு மேல் இல்லை. அவரது வாழ்நாளின் எஞ்சிய பகுதியில், 100 திருமணங்கள் மற்றும் 100 விவாகரத்துகளை எட்டுவது அவரது இலக்காம். அவருக்கு ஏற்கனவே மொத்தம் 22 குழந்தைகள் உள்ளனர்.
வைரலாகும் வீடியோ
அவர்கள் தங்கள் தாயுடன் வசித்து வருகின்றனர். விவாகரத்துக்குப் பிறகு மனைவிகள் வாழ்வதற்கு வீடுகள் மற்றும் செலவுகளை வழங்கியதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். இது தான எனது பொழுதுபோக்கு என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த பொறுப்பான 90 ஸ் கிட்ஸ் சிலர் இங்க ஒன்னுக்கே வழியில்லை எப்புட்றாரா .. என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.