முதியவர் TO மாடல் - இணையத்தை கலக்கும் கூலி தொழிலாளி
மங்கிபோன அழுக்கு லுங்கி மற்றும் சட்டையுடன் கேரளாவின் கோழிகோட்டில் சுற்றி திரிந்த 60 வயதான முதியவர் இன்று சூப்பர் கிளாம் மாடலாக சமூக ஊடகங்களில் கலக்கி வருகிறார்.
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியினை சேர்ந்தவர் மம்மிக்கா என்ற 60 வயது முதியவர் தினசரி கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த தினசரி கூலித் தொழிலாளியின் மாடலிங் திறமையைக் கண்டறிந்த புகைப்படக் கலைஞர் ஷரீக் வயல் , தனது சமூக ஊடகப் பக்கத்தில் மம்மிக்காவின் புகைப்படத்தை வெளியிட்டார்.
கூலித் தொழிலாளி மம்மிக்கா நடிகர் விநாயகனுடனான தோற்றத்தோடு ஒத்துபோனதால் அவர் வைரலானார்.
சாதாரண கூலித்தொலிலாளியை மம்மிக்காவை மேக்கப் கலைஞரான மஜ்னாஸ் , ஆஷிக் ஃபுவாத் மற்றும் ஷபீப் வயலில் ஆகியோர் போட்டோஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட்டனர்.
தற்போது அந்த வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகள் இணையத்தில் வைராகி வருகிறது.