காலாவதியாகும் 60 லட்சம் ரெம்டெசிவர் : ரூ.1000 கோடி இழப்பு

COVID-19 Vaccine
By Irumporai Jun 06, 2022 11:28 AM GMT
Report

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்தாக ரெம்டெசிவர் பயன்படுகிறது. கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்த ரெம்டெசிவர் மருந்து முக்கியத்துவம் வாய்ந்தது.

தட்டு்ப்பாடான ரெம்டெசிவர்

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தொற்று உச்சத்தில் இருந்தபோது நாடு முழுவதும் ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகவே ரெம்டெசிவர் மருந்தின் தேவையும் அதிகமாக இருந்தது. இதனால் அந்த மருந்து அதிக அளவில் தயாரிக்கப்பட்டது.

காலாவதியாகும் 60 லட்சம் ரெம்டெசிவர் : ரூ.1000 கோடி இழப்பு | 60 Lakh Remdesivir Vials May Be Destroyed

காலாவதியான ரெம்டெசிவர்:

இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் இந்தியாவிலும், உலக அளவிலும் கொரோனா பாதிப்பு குறைந்தது. இதனால் ரெம்டெசிவர் மருந்து குப்பிகள் தேக்கம் அடைந்தன. இந்தியாவில் தற்போது 60 லட்சம் ரெம்டெசிவர் மருந்து குப்பிகள் காலாவதியாகும் காலத்தை நெருங்கி விட்டன.

ரெம்டெசிவர் மருந்து மட்டுமின்றி கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு மருந்துகளும் காலாவதியாகும் நிலையில் உள்ளன. ரெம்டெசிவர் 60 லட்சம் குப்பிகள் உள்பட கொரோனா மருந்துகள் காலாவதியாவதால் ஒட்டுமொத்தமாக ரூ.1000 கோடி இழப்பு ஏற்படும் என்று மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு : பாகிஸ்தான் கருத்திற்கு இந்தியா கண்டனம்