பாகிஸ்தானில் 60 இந்துக்கள் மதமாற்றம்? - அதிர்ச்சி தகவல்
Pakistan
Hindus converted
By Petchi Avudaiappan
பாகிஸ்தானில் 60 இந்துக்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் மக்கள்தொகையில் 2 சதவீதத்திற்கும் அதிகமாக இந்துக்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையான மக்கள் சிந்து மாநிலத்தில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் 60க்கும் மேற்பட்ட இந்துக்கள் இஸ்லாமிய மதத்திற்கு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாகவும், இவர்கள் அனைவரும் நகராட்சித் தலைவர் அப்துல் ரவூப்நிஜாமை முன்னிலையிலேயே இணைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.