சீரியலை பார்த்து 6 வயது சிறுமியை கொலை செய்த சிறுவன் - அன்பு கிடைக்காததால் நடந்த சோகம்
சீரியலை பார்த்து சிறுமியை சிறுவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாயமான சிறுமி
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தின், நாலாசோபாரா கிழக்கு பகுதியின் ஸ்ரீராம் நகரில், 6 வயது சிறுமி பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார்.
வெகு நேரமாகியும் திரும்பி வராத நிலையில் சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், சிறுமி விளையாடிய பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சீரியல் பார்த்து கொலை
அதில் 13 வயது உறவுக்கார சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை அழைத்து சென்றது தெரிய வந்தது.அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில், முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்துள்ளார். இதனால் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்படவே சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
சிறுவன் அளித்த வாக்குமூலத்தில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிறுவனை உதாசீனப்படுத்தி விட்டு, அந்த பெண் மீது அதிக அன்பு செலுத்துவதாக பொறாமைப்பட்டுள்ளார். சிறுவன் சமீபத்தில் ராமன் ராகவ் என்ற கிரைம் சீரியல் பார்த்துள்ளான்.
அதில் ராமன் ராகவ் என்ற கதாபாத்திரம் இரும்பு தடியால் அடித்து கொலை செய்வதை பார்த்து கொலை செய்துள்ளான். சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து, முகத்தில் கல்லை தூக்கிப்போட்டுள்ளார். சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
