யோகா எல்லாம் எனக்கு சர்வ சாதாரணம் : ஆச்சரியமூட்டும் நாயின் வைரல் வீடியோ
லேப்ரடார் வகையை சேர்ந்த நாய் ஒன்று தனது உரிமையாளருடன் சேர்ந்து 6 யோகா நிலைகளை செய்து அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளின் வேடிக்கையான நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம். மனிதர்களைப் போல பழக்க வழக்கங்களை கொண்டு உயிரினங்களை கண்டால் நம்மில் அனைவருக்கும் நிச்சயம் ஆச்சரியம் தான் ஏற்படும்.
அந்த வகையில் magnusthetherapydog என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேப்ரடார் வகையை சேர்ந்த நாய் ஒன்றின் பல்வேறு நிகழ்வுகள் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஒரு வீடியோவில் அந்த நாய் தனது உரிமையாளருடன் சேர்ந்து 6 யோகா நிலைகளை செய்து அசத்தியுள்ளது.
மேக்னஸ் பென்ற பெயரிடப்பட்ட அந்த ஆண் நாய் பெண் உரிமையாளர் செய்து காட்டும் யோகா நிலைகளை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் செய்கிறது. முதலில் மேக்னசின் உரிமையாளர் யோகா விரிப்பு ஒன்றை தரையில் விரிப்பதுடன் வீடியோ தொடங்குகிறது. அவருடன் சேர்ந்து மேக்னசும் வேறொரு யோகா விரிப்பு ஒன்றை தரையில் விரிக்கிறது.
பின் உரிமையாளரை போன்று ஊர்ந்து சென்று விரிப்பில் படுத்து கொள்வதோடு, தனது முன்னங்கால்களை உரிமையாளரின் கால் மூட்டுகள் மீது வைத்தபடி அமர்ந்து இருக்கிறது. அடுத்தாக 4 கால்களில் நின்றபடி அப்படியே முன்னோக்கி வளைந்து சென்று மேலே எழும்புகிறது.
மேலும் அமர்ந்தபடி தனது முன்னங்கால்களை கீழ் நோக்கி மடக்கியபடி யோகா செய்கிறது. தொடர்ந்து வானை நோக்கி படுத்தபடி காலை முன்னோக்கி வைத்து இருக்கும் யோகா நிலையுடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.