எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் 6 வயது சிறுமி! சாதனை
தமிழகத்தின் தாராபுரம் பகுதியை சேர்ந்த தந்தை மற்றும் மகள் எவரெஸ்ட் மலை அடிவாரம் வரை சென்று சாதனை படைத்துள்ளார்.
திருப்பூரின் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் வி.மோகன்ராஜ், சண்டீகரில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சன்விகா(வயது 6).
இருவரும் எவரெஸ்ட் மலை அடிவாரம் (Base Camp) வரை சென்று சாதனை படைத்துள்ளனர், இதன் மூலம் தமிழகத்தின் 2வது இளைய சிறுமி என்ற பெருமையை சன்விகா பெற்றுள்ளார்.
இதுகுறித்து தந்தை மோகன்ராஜ் கூறுகையில், சிறுவயதில் இருந்தே சன்விகாவுக்கு மலையேற்றத்தில் அதிக ஈடுபாடு உண்டு, கர்நாடகம், பஞ்சாப் பகுதிகளுக்கு அழைத்து செல்வேன்.

தற்போது இந்த பயணத்திற்கு நான் உடன் வந்தேன், கடந்த ஏப்ரல் 4ல் தொடங்கி 14ல் மலை அடிவாரத்தை அடைந்தோம், குழந்தைகள் போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளாகாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாற்றுத்திறனாளிகளும் சவால்களை தாண்டி சாதிக்க முடியும் என்பதை உணர்த்துவே இதன் நோக்கமாகும் என தெரிவித்தார்.
மேலும் யூலை மாதத்தில் சன்விகா கிளிமாஞ்சரோ செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.