Nepal Flood: 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

Nepal
By Fathima Aug 31, 2026 04:52 AM GMT
Report

நேபாள வெள்ளத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 வயது சிறுமி 3 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நேபாளத்தில் கடந்த 26ம் தேதி பனிப்பாறை சரிந்து விழுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் இதுவரையிலும் 800 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, ரசுவா மாவட்டத்தில் ஆயுதக்காவல் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அழுகுரல் கேட்டுள்ளது.

அதிகாரிகள் வேகமாக அந்த பகுதியை தோண்டிய போது 6 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாள்,

இதனையடுத்து ஹெலிகொப்டர் மூலம் சிறுமியை காத்மாண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15