ஆபாச படம் பார்க்க மறுத்த சிறுமி அடித்து கொலை - 3 சிறுவர்கள் அட்டூழியம்

அசாம் மாநிலத்தில்  ஆபாச படம் பார்க்க மறுத்த சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தின் நிஜோரியை சேர்ந்த 6 வயது சிறுமியை, அவருக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆன 8 மற்றும் 11 வயது உடைய 2 சிறுவர்கள் என 3 பேருடன் நட்பில் இருந்துள்ளார். 

சிறுவர்கள் 3 பேரிடமும் செல்போன்கள் இருந்துள்ள நிலையில் அதில் ஆபாச படங்கள் அதிகளவில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மொபைல் போனில் ஆபாச படம் பார்க்க 3 சிறுவர்களும் அந்த சிறுமியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.  

இதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கவே, ஏமாற்றத்தில் ஆத்திரமடைந்த அச்சிறுவர்கள் வீட்டின் அருகே உள்ள கல் உடைக்கும் ஆலையின் கழிவறையில் சிறுமியை நேற்று முன்தினம் அடித்து கொன்றனர். அதன்பிறகு எதுவுமே நடக்காததுபோல சிறுமியின் வீட்டிற்கு சென்று, பக்கத்து பேக்டரியின் பாத்ரூமில் அவள் மயங்கி கிடப்பதாக சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிச்சென்றுவிட்டனர்.

இதை கேள்விப்பட்டு குடும்பத்தினர் பதறிகொண்டு பார்த்தபோதுதான், சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.. இதையடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிந்து, அவர்களும் விசாரணையை துவக்கி உள்ளனர். தையடுத்து, அந்த 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு ஒத்துழைக்காத ஒரு சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டார். சிறுவர்களின் இந்த செயல் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்