60 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் - 5 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு...!
உ.பி.யில் 60 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவனை மீட்புக்குழுவினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
60 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன்
நேற்று உத்தரபிரதேச மாநிலம், ஹாபூரில் உள்ள மொஹல்லா பூல் கர்ஹியில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவன் 60 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
இதனையடுத்து, உடனடியாக போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த NDRF சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பத்திரமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவனுக்கு உடலில் சிறிது காயம் ஏற்பட்டது. உடனடியாக அச்சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தற்போது மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, இது தொடர்பாக வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மீட்பு குழுவினருக்கும், போலீசாருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

WATCH: #BNNIndia Reports
— Neeraj tiwari (@Neerajtindian30) January 10, 2023
A 6 year old boy fell in borewell. The incident reported in Mohalla Phool Garhi , Hapur, Uttar Pradesh. As per the information rescue operation is in progress. @myogioffice @myogiadityanath @hapurpolice pic.twitter.com/OMevbzql3I