8 ரயில் சேவைகள் அடுத்த 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம் - தெற்கு ரயில்வே தெரிவிப்பு

cancelled southern railways 6 trains covid times
By Swetha Subash Jan 22, 2022 05:47 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் ரயில் சேவைகளை இயக்குவதில் சில பிரச்சினைகள் இருப்பதால் தற்காலிகமாக 8 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் பல மாதங்கள் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் இயங்கி வருகின்றன. அத்துடன் ரயில்களில் பயணிக்க பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நான்கு பயணிகள் ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாகர்கோவில் - கோட்டயம் எக்ஸ்பிரஸ், கொல்லம் -திருவனந்தபுரம் ,கோட்டயம் - கொல்லம், திருவனந்தபுரம் - நாகர்கோவில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் சர்வாட்டூர் தொடங்கி மங்களூர் விரைவு ரயில் , கண்ணனூர் தொடங்கி சர்வாட்டூர் ரயில் சேவைகளும் இன்று முதல் ஜனவரி 30-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மங்களூர் தொடங்கி கோழிக்கோடு விரைவு ரயில் மற்றும் கோழிக்கோடு தொடங்கி கண்ணூர் விரைவு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.