எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது
Indian fishermen
Tamil nadu
Sri Lanka
By Thahir
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
தமிழக மீனவர்கள் கைது
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று வழக்கம் போல் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது,
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 6 மீனவர்களை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் நாடு திரும்பாத நிலையில் மீண்டும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.