வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள்; பரவிய வீடியோ - 6 பேர் சஸ்பெண்ட்
மாணவிகள், வகுப்பறையில் வட்டமாக அமர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோ பகீர் கிளப்பியுள்ளது.
மாணவிகள் அட்டூழியம்
திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் ஆறு பேர் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்துவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
சஸ்பெண்ட்
இந்த சம்பவம் குறித்து 6 மாணவிகளின் பெற்றோர்களை வரவைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு 6 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் விரிவான விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திலேயே மாணவிகள் மது அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.