ஈஷா யோகா மையத்தில் 6 பேர் மாயம் - நீதிமன்றத்தில் வெளியான பகீர் தகவல்!
ஈஷா யோகா மையத்திலிருந்து 6 பேர் மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈஷா யோகா மையம்
தென்காசியைச் சேர்ந்தவர் கனேசன்(45). கடந்த 2007ல் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இணைந்துள்ளார். பின் பெயரை சுவாமி பவதுதா என மாற்றிக் கொண்டு, அங்கேயே தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில், 2023ல் வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பவில்லை. இதனையடுத்து அவரது உறவினர்கள் ஈஷா யோக மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜாவை தொடர்பு கொண்டதில் அவர் அங்கு வராதது தெரியவந்துள்ளது.
அதன்பின் போலீஸில் புகாரளித்ததில், விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், ஓராண்டுக்கு மேலாகியும், தனது சகோதரர் எங்கிருக்கிறார் என்பது தெரிய வரவில்லை என ஏழுமலை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
6 பேர் மாயம்
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், காவல்துறை சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், கடந்த 2016 முதல் ஈஷாவிலிருந்து வெவ்வேறு தேதிகளில், 6 பேர் காணாமல் போய் உள்ளனர்.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
உடனே காணாமல் போனவர்கள் குறித்த வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க வேண்டும் என்றும், உரிய பதில் தாக்கல் செய்யவேண்டும் எனக் கூறி வழக்கை ஏப்ரல் 8க்கு ஒத்திவைத்தனர்.