வெளியே சென்ற 6 வீரர்கள் - டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்குமா?

New Zealand World test championship match Bio bubble
By Petchi Avudaiappan Jun 17, 2021 12:37 PM GMT
Report

 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இதற்கான இரு அணி வீரர்களும் சவுத்தாம்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போல்ட், சவுத்தீ, அணியின் பிசியோ உட்பட 6 பேர் மைதானத்துக்கு அருகில் உள்ள கோல்ப் மைதானத்தில் கோல்ப் விளையாடி கொண்டு இருப்பதைக் கேள்விப்பட்ட இந்திய அணி நிர்வாகம் ஐசிசி மேலதிகாரியிடம் தெரிவித்தது.

வெளியே சென்ற 6 வீரர்கள் - டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்குமா? | 6 New Zealand Players Breached Bio Bubble

இதனால் திட்டமிட்டபடி இறுதிப்போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் வீரர்கள் தனிமை காலம் முடிந்தவுடன் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்லலாம் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய ஐசிசி மேலதிகாரி, இந்திய வீரர்களும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வரை எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக சென்று வரலாம் என்றும் கூறியுள்ளார்.

எனவே திட்டமிட்டபடி நாளை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.