இது இந்திய அணியா... இல்ல.. மும்பை அணியா? - கொதித்து எழும் ரசிகர்கள்
டி20 உலகக்கோப்பை தொடருக்காக பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த வீரர்கள் பட்டியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதற்கு காரணம் ஐபிஎல்லில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி போட்ட ட்வீட்டாகும்.மற்ற அணிகள் ஒட்டுமொத்த வீரர்களின் பட்டியலையும் ட்வீட் போட்ட நிலையில், மும்பை அணி 15 பேரில் 6 பேர் தங்கள் அணியை சேர்ந்தவர்கள் என பெரும்பான்மையை காட்டும் முனைப்போடு ட்வீட் போட்டுள்ளது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் இது இந்திய அணியா? இல்லை மும்பை அணியா? என கேள்வியெழுப்பியுள்ளனர். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹர், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகிய 6 பேரும் மும்பை அணிக்காக விளையாடி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
From maiden T20 WC selection to a record 7th T20 World Cup. A proud moment for our 6️⃣ ??
— Mumbai Indians (@mipaltan) September 8, 2021
7️⃣ x Rohit
2️⃣ x Hardik & Jasprit
1️⃣ x Surya, Rahul & Ishan#OneFamily #MumbaiIndians #T20WorldCup @BCCI pic.twitter.com/6R0XNbvIND