இந்திய அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா உறுதி - முதல் ஒருநாள் போட்டி நடக்குமா?
இந்திய அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய வீரர்கள் அனைவரும் நேற்று விமானம் மூலம் அகமதாபாத்திற்கு வரவழைக்கப்பட்டு பயோ பபுளுக்குள் சேர்க்கப்பட்டனர். இந்த தனிமைப்படுத்தலின் போது ஒவ்வொரு நாளும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 3 வீரர்கள் உட்பட மொத்தம் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ருத்துராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.