ஒரே ஆண்டில் ரூ.6 லட்சத்துக்கு இட்லி ஆர்டர் செய்த நபர் - யாரு சாமி நீ!

Hyderabad Idli Swiggy
By Sumathi Mar 31, 2023 05:12 AM GMT
Report

 கடந்த ஒரு வருடத்தில் இட்லிக்காக நபர் ஒருவர் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளார்.

இட்லி பிரியர் 

உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இட்லி என்ற உணவு குறித்து கடந்த ஓராண்டாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை, ஸ்விக்கி உணவு சேவை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்த ஓராண்டு காலத்தில், ஸ்விக்கி நிறுவனம் 3.30 கோடி, பிளேட் இட்லிகளை வீடுகளுக்கு, டெலிவரி செய்துள்ளது.

ஒரே ஆண்டில் ரூ.6 லட்சத்துக்கு இட்லி ஆர்டர் செய்த நபர் - யாரு சாமி நீ! | 6 Lakh Rupees To Eat Idli In One Year Swiggy

இதில், பெங்களூரு, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன. அடுத்தபடியாக புதுடில்லி, கோல்கட்டா, கொச்சி, மும்பை, கோவை, புனே, விசாகப்பட்டினம் ஆகிய இடங்கள் அதிகப்படியான இட்லிகளை ஆர்டர் செய்துள்ளன.

ஸ்விக்கி தகவல்

இதில், தெலுங்கானாவின் ஹைதராபாதை சேர்ந்த ஒரே நபர், கடந்த ஓராண்டில் 6 லட்சம் ரூபாய்க்கு 8,428 பிளேட் இட்லி ஆர்டர் செய்துள்ளார். தனக்கு மட்டுமின்றி, உறவினர்கள், நண்பர்களுக்கும், அடிக்கடி பெங்களூரு மற்றும் சென்னைக்கு ரயிலில் செல்லும் போதும் ஆர்டர் செய்துள்ளார்.

தினமும் காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை தான் இட்லி அதிக அளவில் விற்பனையாகின்றன. பெங்களூரு நகரில் மட்டும் ரவா இட்லி அதிகம் விற்பனையாகின்றன. ஸ்விக்கி செயலியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட காலை உணவு பட்டியலில் மசால் தோசைக்கு பின் இட்லி இரண்டாவது இடம் பிடித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.