டிப்பர் லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டில் நடந்த பயங்கரம்..!

Tamil nadu Death Chengalpattu
By Thahir Aug 11, 2023 06:06 AM GMT
Report

செங்கல்பட்டு அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது டிப்பர் லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

4 பேர் உயிரிழப்பு 

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

6 killed in truck collision near Chengalpattu

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர் மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய ஓட்டுனரை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.