குழந்தையிடம் மெதுவாக நெருங்கி வந்த 6 அடி முதலை - லாவகமாக பிடித்த ராணுவ வீரர் - திக் திக் வீடியோ

Captured Soldier 6-feet-crocodile 6 அடி முதலை ராணுவ வீரர் பிடித்தார்
By Nandhini Mar 05, 2022 09:06 AM GMT
Report

அமெரிக்கா, புளோரிடாவில் உள்ள ஒரு தோட்டத்தில் 6 அடி முதலை ஒன்று வந்துள்ளது. அந்த முதலை தோட்டத்தில் உள்ள வீட்டிற்குள் நுழைந்து குழந்தையிடம் நெருங்கியுள்ளது. 

இதைப் பார்த்த பெற்றோர்கள் குழந்தையை காப்பாற்றி கத்தி கூச்சல் போட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த முன்னாள் ராணுவ வீரர் யூஜின் போஸி முதலையை பிடிக்க தைரியமாக இறங்கினார். 

இதனையடுத்து, தன்னைக் காத்துக் கொள்ள குப்பைத் தொட்டியை வைத்து 6 அடி முதலை லாவகமாக பிடித்தார். முதலையை பிடித்தவுடன் அதை ஒரு புதரில் கொண்டு போய் விட்டார். 

குழந்தையின் உயிரை பறிக்க வந்த முதலையிடம் தைரியமாக போராடி பிடித்த யூஜின் போஸிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ  -


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8