6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை..!

chennai secretariat 6 district collectors cm meeting
By Anupriyamkumaresan May 27, 2021 12:41 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 6 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இதில் தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை இயக்குனர், கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.  

6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை..! | 6 District Collectors Cm Meeting