புதைக்கப்பட்ட 6 பிணங்களை காணவில்லை - மிரண்ட கிராம மக்கள்!
சுடுகாட்டில் புதைக்கப்பட்ட 6 பிணங்களை காணவில்லை என கிராம மக்கள் புகாரளித்துள்ளனர்.
பிணங்கள் மாயம்
திண்டுக்கல், பூத்தாம்பட்டி ஏ.டி.காலனியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கென்று தனி மயானம் உள்ளது.
இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டில் குழி தோண்டுவதற்காக கிராம மக்கள் சென்றுள்ளனர்.
கிராம மக்கள் புகார்
அப்போது, அங்கு ஏற்கனவே இருந்த 6 சமாதிகளும், அதில் புதைக்கப்பட்டிருந்த 6 பிணங்களும் காணாமல் போயுள்ளது. உடனே மக்கள் இதுகுறித்து அப்பகுதியில் விசாரித்ததில், நள்ளிரவு மயான பகுதிக்கு வந்த மர்மநபர்கள், மண்ணை அள்ளினர்.
அத்துடன் சமாதிகளையும் தோண்டிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் வேடசந்தூர்-எரியோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து விரைந்த போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தை அப்புறப்படுத்தினர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.