ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் - தனது பெரிய ஆசையை ஓபனாக வெளிப்படுத்திய க்ரூணல் பாண்டியா
இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரருமான கிருனால் பாண்டியா பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் நிபுணர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரு வற்றிலும் மிக சிறந்த முறையில் விளையாடும் கிருனால் பாண்டியா இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவின் சகோதரராவார்.
இவர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கிய வீரராக செயல்பட்டு பலமுறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்கள்,மேலும் இந்திய அணிக்காகவும் சிறப்பாக விளையாடி உள்ளார்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது கிருனால் பண்டியா நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். உங்கள் வாழ்நாளில் ஒரு சாதனையை செய்ய வேண்டும் என்றால் அது எந்த சாதனை என்று பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கிருனால் பாண்டியா, ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.
இந்த சாதனையை முதன்முதலில் சவுத்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் கிப்ஸ் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அடித்தார். அதன்பின் யுவராஜ் சிங் 2007 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்து அசத்தியுள்ளார்.
அடுத்தபடியாக, நீங்கள் மற்றும் உங்கள் சகோதரர் ஹார்த்திக் பாண்டியா ஆகிய இருவரைப் பற்றியும் வாழ்க்கை படம் எடுக்க வேண்டும் என்றால் எந்த நடிகர் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எங்களுடைய கதையை வாழ்க்கை படமாக எடுக்க வேண்டுமென்றால் என் கதாபாத்திரத்திற்கு விக்கி குஷால் மற்றும் ஹார்திக் பாண்டியாவின் கதாபாத்திரத்திற்கு ரன்வீர் சிங் ஆகிய இரு நடிகர்களும் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்தார்.
அடுத்தபடியாக டி20 கிரிக்கெட் தொடரில் எந்த ஒரு அதிரடி வீரருக்கு பந்து வீச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த கிருனால் பாண்டியா அது நிச்சயம் கிறிஸ்துவில் தான் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது என்று பதிலளித்தார்.