சிறையில் தள்ளுங்க..தந்தை போட்ட கண்டிஷன் - பொருக்க முடியாமல் 5 வயது சிறுவன் புகார்!
5 வயது சிறுவன், தனது தந்தை மீதே புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் புகார்
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்தவர் இக்பால் காத்ரி. இவருடைய 5 வயது மகன் ஹஸ்னைன். இந்தச் சிறுவன்தான், தனது தந்தை மீதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதாவது விறுவிறுவென காவல் நிலையத்திற்குச் சென்ற அச்சிறுவன் அங்கிருந்த அதிகாரிகளிடம் தந்தை மீது புகார் அளிக்க வந்திருப்பதாக கூறினார். பிறகு அந்தச் சிறுவனை நாற்காலியில் அமரவைத்து விவரமாக கேட்டறிந்தனர்.
தந்தை கண்டிஷன்
அப்போது அவன், “என்னை ஆற்றில் குளிக்க எனது தந்தை தடை விதிக்கிறார். மேலும் திட்டுவதுடன் என்னை அடிக்கவும் செய்கிறார். ஆகையால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரைச் சிறையில் தள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.
அதிகாரிகளும் அவரது தந்தை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சிறுவனுக்கு உறுதியளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.