இந்தப்படம் பலரின் இதயத்திற்கு நெருக்கமான படம் - கார்த்திக் சுப்புராஜ் சொன்னது எதை தெரியுமா?
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இறைவி படம் இன்றோடு வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் "இறைவி". சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். ஆண்களின் சுயநலத்தின் வாயிலாக, பெண்களின் வாழ்கை எப்படி இறையாக்கப்படுகிறது என்பதை மிக அழுத்தமாக பேசியதால் இப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.
Five years of #Iraivi
— karthik subbaraj (@karthiksubbaraj) June 3, 2021
Film that will always be close to My & many more hearts ❤️
Here's the Last Page of the First Draft of the Scene Order ?#5yearsofIraivi pic.twitter.com/lmQInXaM3v
இதனிடையே இறைவி படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ், முதல் டிராப்டில் எழுதிய இறுதிக்காட்சியின் சீன் பேப்பரை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தப் படம் எனக்கு மட்டுமல்லாது பலரின் இதயத்திற்கு நெருக்கமான படமாக இருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.