வீட்டு வேலையை செய்ய சொன்ன தாய்.. 5-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - பகீர் பின்னணி!
5-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5-ம் வகுப்பு மாணவி
ஈரோடு மாவட்டம் உடையார்பாளையத்தில் வசித்து வருபவர் சரவணன் -மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் அக்ஷயா 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளைச் செய்யும்படி அக்ஷயாவிடம் அவரது தாய் கூறியதாகத் தெரிகிறது. பின்னர் அவர் வழக்கம் போல் மஞ்சுளா வேலைக்குச் சென்றுவிட்டார்.
மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது சமையல் அறையில் அக்ஷயா துப்பட்டாவால் தூக்குப்போட்டுத் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மஞ்சுளா கத்தி கூச்சலிட்டுக் கதறி அழுதுள்ளார்.
தற்கொலை
இந்த சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே அக்ஷயாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அக்ஷயா உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து உடையார்பாளைய காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த அவர்கள் அக்ஷயாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.