விஐடி போபால் பல்கலைக்கழகம் - 5வது பட்டமளிப்பு விழா

Madhya Pradesh
By Karthikraja Oct 05, 2024 03:32 PM GMT
Report

5வது ஆண்டு பட்டமளிப்பு

விஐடி போபால் பல்கலைக்கழகம் அக்டோபர் 4, 2024 வெள்ளிக்கிழமையன்று தனது 5வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை மிக சிறப்பாக கொண்டாடியது. இவ்விழாவில் 1945 இளங்கலை பட்டதாரிகள், 328 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 14 பிஎச்.டி. பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் மாண்புமிகு வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் அவர்கள் பட்டதாரிகளுக்கு உறுதிமொழி பிரமாணத்தை செய்து வைத்தார்.

மத்தியப் பிரதேசத்தின் மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் இந்த மாபெரும் நிகழ்வின் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் முன்னாள் மாநில கல்வி அமைச்சராகவும் இருந்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பையும்,வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் “Institute of Eminence” என இந்திய அரசு முன்மொழிந்ததையும் குறிப்பிட்டார். விஐடி போபாலில் பெற்றோர் தங்கள் மாணவரைச் சேர்த்தால், அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

முதலமைச்சர் உரை

முதலமைச்சர் தனது உரையில் மாணவர்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்த்திற்கு VIT Bhopal இன் 100% முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் பங்களிப்பை மிகவும் பாராட்டினார். VIT Bhopal இன்அனைத்து ஆசிரியர்களும் வெவ்வேறு துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். விஐடி போபால் பல்கலைக்கழகம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை உறுதி செய்கிறது என்றும் பெருமைப்படுத்தினார். நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் “VIKSHIT BHARAT”தொலைநோக்கு சிந்தனையைப் பற்றி கூறி இளம் மாணவர்களை தனது உரையில் ஊக்கப்படுத்தினார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் அனைத்து துணைவேந்தர்கள் மற்றும் வேந்தர்களை குல்பதி மற்றும் குல் குரு என இனி அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் அறிவித்தார். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கான இரண்டு புதிய தங்கும் விடுதிகளையும் முதல்வர் திறந்து வைத்தார். பட்டமளிப்பு விழாவில், வருவாய்த்துறை அமைச்சர் திரு.கரண் சிங் வர்மா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் (சுயேச்சை பொறுப்பு), திருமதி. கிருஷ்ணா கவுர், எம்.எல்.ஏ (Sehore) திரு.சுதேஷ் ராய், எம்.எல்.ஏ திரு.கோபால் சிங், MPPURC தலைவர், ஸ்ரீ பரத் ஷரன் சிங் மற்றும் உயர் கல்வி ஆணையர் ஸ்ரீ நிஷாந்த் வார்வேட், HCM முதல் OSD to IGP மற்றும் Sehore ஆட்சியாளர் மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

காதம்பரி எஸ். விசுவநாதன்

கெளரவ விருந்தினராக, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர். ரவி பி.காந்தி, விஐடி போபாலில் மாணவர்களின் படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் முழுவதிலும் தனித்துவமாக இருப்பதை பாராட்டினார். அவர்களின் லட்சியத்திற்கும், குறிக்கோளுக்கும் உண்மையாக இருக்கவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் அவர் மாணவர்களை வலியுறுத்தினார்.

VIT போபாலின் உதவித் துணைத் தலைவரான காதம்பரி எஸ். விசுவநாதன், தனது உரையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 90% மாணவர்கள் சிறப்பான வேலை வாய்ப்புகளை பெற்றதை குறிப்பிட்டார். 2024 ஆம் ஆண்டில் பொருளாதாரச் சவால்களை மீறி 87% வேலை வாய்ப்புகள் பெற்றதை பெருமையுடன் அறிவித்தார். ஆண்டு சம்பளம் ரூபாய் 50 லட்சத்துடன் நான்கு மாணவர்கள் Apple, Microsoft, Zomato போன்ற நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை பெற்றனர், மேலும் 60% மாணவர்கள் ட்ரீம் மற்றும் சூப்பர் ட்ரீம் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். பல்கலைக்கழகம் கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச வேலை வாய்ப்புகளைப் உறுதிப்படுத்தி வருகிறது. இது உலக அளவில் தடம் பதித்திருப்பதை அறிவித்தார்.

ஸ்டார்ஸ் திட்டம்

விஐடி போபாலின் ஸ்டார்ஸ் திட்டம் பற்றி காதம்பரி விசுவநாதன் பேசினார், இது மத்திய பிரதேச அரசுப் பள்ளிகளில் இருந்து மாவட்ட அளவில் முதன்மை இடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி மற்றும் இலவச உறைவிடத்தை வழங்குகிறது. இந்த முயற்சியின் கீழ், கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த 74 மாணவிகள் மற்றும் 60 மாணவர்கள் வேலைவாய்ப்புகளில் சிறந்து விளங்கியுள்ளனர், 2024 ஆம் ஆண்டில் ஒரு பட்டதாரி மைக்ரோசாப்ட் வழங்கும் ஆண்டிற்கு ₹51 லட்ச வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்.

பலர் AMD, Shell, Amazon மற்றும் JSW போன்ற நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் வெற்றியானது இம்மாதிரியான வேலை வாய்ப்புகளின் மூலம் கிராமப்புற மாணவர்களின் திறனை மேம்படுத்துகிறது.