வாடிக்கையாளர்கள் உஷார் - இன்று முதல் ஏடிஎம் கட்டணம் உயர்வு
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான விதிகளில் சில மாற்றங்களை 6 ஆண்டுகளுக்கு பின் ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி, வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் மாதத்திற்கு ஐந்து முறை கட்டணமின்றி பரிவர்த்தனை செய்யலாம் என்றும், அதற்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் கட்டணம் ரூ.15 யில் இருந்து ரூ.17ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனை அல்லாத மற்ற சேவைக்கு ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான கட்டணம் ரூ.5யில் இருந்து ரூ.6ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் மற்ற வங்கிகளின் ஏடிஎம் இயந்திரத்தில் மாதத்திற்கு மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு மாற்றம் ஆகஸ்ட் 1 ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.