60 நிமிடத்தில் 1575 புஷ்அப்ஸ் - 59 வயதில் உலக சாதனை படைத்த பாட்டி
59 வயதான பெண்மணி அதிக புஷ்அப் எடுத்த கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
புஷ்அப் சாதனை
கனடாவைச் சேர்ந்த டோனா ஜீன் என்ற 59 வயதான பெண், 60 நிமிடங்களில் 1,575 புஷ் அப்களை முடித்து தனது இரண்டாவது உலக சாதனையை படைத்துள்ளார்.
புஷ்அப் செய்யும் பொழுது நமது முழங்கைகள் 90° வரை கிழே வளைய வேண்டும். மீண்டும் எழும் பொழுது கைக்கள் இரண்டும் முழுவதுமாக நீட்டிக்கப்படவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் டோனா ஜீன் இந்த சாதனையை படைத்துள்ளார். அதுவும் முதல் 20 நிமிடங்களில் 620 புஷ்அப்களை எடுத்துள்ளார்.
பிளாங்க் சாதனை
கடந்த மார்ச் மாதம் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் 11 வினாடிகள் பிளாங்க்(Plank) பொசிஷனில் இருந்து தனது முதல் உலக சாதனையை பதிவு செய்தார்.
டோனா ஜீன் 12 பேரக்குழந்தைகளுக்கு பாட்டி ஆவார். அவரின் உலக சாதனை நிகழ்வின் போது 11 பேரக்குழந்தைகளும் கலந்து கொண்டு அவரை உற்சாகப்படுத்தினர். எங்கள் பாட்டி ஒரு சூப்பர் ஹீரோ என எழுதிய பதாகைகளை கையில் வைத்திருந்தார்கள்.
சாதனை முடியும் தருவாயில், பேரன் எனது பெயரை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். நான் என் கண்ணீரை அடக்கி கொண்டு, இலக்கில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. நாம் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய இலக்குகளை வைத்திருந்தால் எல்லா வயதிலும் அழகாகவும் சக்தி வாய்ந்தவராகவும் இருப்போம் என டோனா ஜீன் தெரிவித்துள்ளார்.