துருக்கியில் இடிபாடுகளில் 40 பேரை உயிருடன் கண்டுபிடித்த நாய்... - நிம்மதியாக உறங்கிய படம் வைரல்..!
துருக்கி இடிபாடுகளுக்கு அடியில் 40 பேரை உயிருடன் கண்டுபிடித்த ஹஸ்கி நாய் தற்போது நிம்மதியாக தூங்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
பல அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த நிலநடுக்கத்தில் கீழே இடிந்து விழுந்து தரைமட்டமாயின. இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் படுகாயமடைந்துள்ளனர்.

ஹீரோ ஹஸ்கி
சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கு அடியில் 40 பேரை உயிருடன் கண்டுபிடித்த துனிசிய ஹீரோ ஹஸ்கி நாய், 56 மணி நேர இடைவிடாத தேடுதலுக்குப் பிறகு அயர்ந்து தூங்கியது.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஹீரோ ஹஸ்கிக்கு நன்றி தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
He slept after 56 hours of non-stop search and found 40 people alive under the rubble.. at Turkey.. This is the Tunisian hero Husky #TurkeyEarthquake pic.twitter.com/4X1c0xKERh
— John Stevenson (@StevoJW) February 21, 2023