படுக்கையில் இருந்த 65 வயது நபரை தேடி வந்த 55 வயது பெண் - சுவாரஸ்ய பின்னணி!
படுக்கையில் இருந்த 65 வயது தொழிலாளியை தேடி வந்து, 55 வயது பெண் கரம்பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதானே காதல்..
கேரளா, சேர்த்தலை பகுதியை சேர்ந்தவர் ரமேசன்(65). தனியார் மருத்துவமனையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். திருமணமான இவர் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், ஓமனா(55) என்பவரும் மணவாழ்க்கை முறிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து திருமணம் செய்ய முடிவெடுத்து, குடும்பத்தினரும் சம்மதித்து தேதியை நிச்சயித்துள்ளனர்.
இதற்கிடையில், ரமேசன் சைக்கிளில் சென்றபோது மோட்டார்சைக்கிள் மோதியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெகிழ்ச்சி சம்பவம்
ஆனால், நிச்சயித்த தேதியிலேயே இருவரு,ம் திருமணம் செய்ய உறுதியாக இருந்ததால், ரமேசனை மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு கட்டிலில் அமர வைக்கப்பட்டார். பின் இருவரும் மாலை மாற்றி ரமேசன், தாலி கட்டினார்.

திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மலர் தூவி வாழ்த்தினர் பின் படுக்கையில் இருந்த நிலையில் சிகிச்சை பெறும் கணவர் ரமேசனை, ஓமனா கவனிக்க தொடங்கினார். இச்சம்பம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.