help- help என கதறும் ஆப்கானிஸ்தான் பெண்! கண்கலங்க வைக்கும் வீடியோ!

america viral afghan lady cry video
By Anupriyamkumaresan Aug 22, 2021 07:31 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in உலகம்
Report

அமெரிக்கா நாடு தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து எடுத்து கொண்டதில் இருந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முடக்கியுள்ளனர்.

அதனால் மற்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் பல லட்சக்கணக்கான மக்கள் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை பிடித்ததிலிருந்து அனைவரும் பயத்துடன் உள்ளனர்.

help- help என கதறும் ஆப்கானிஸ்தான் பெண்! கண்கலங்க வைக்கும் வீடியோ! | 5455

இந்த நாட்டை விட்டு எப்படியாவது வெளியேறிவிடலாம் என அனைவரும் ஏக்கத்துடன் தவித்து வருகின்றனர். தாலிபான் அரசு மக்களுக்கு எந்தவித பாதிப்பும் நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று உறுதி கூறிய பின்னரும் மக்கள் அவர்களது பேச்சை நம்புவதாக இல்லை.

மற்ற நாடுகளுக்கு சென்று விட வேண்டும் என்று மக்கள் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். காபூல் ஏர்போட்டில் மக்கள் குவியும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

help- help என கதறும் ஆப்கானிஸ்தான் பெண்! கண்கலங்க வைக்கும் வீடியோ! | 5455

அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவே பரவிவருகிறது. இந்த நிலையில் ஒரு பெண் கதறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், அந்த பெண் காபூல் ஏர்போர்ட்டில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் தங்களை வெளியே செல்ல ஏர்போர்ட்டுக்கு உள்ளே அனுமதிக்குமாறு கெஞ்சி கதறியுள்ளார்.

அந்த ஆப்கானிஸ்தான் பெண் ஹெல்ப் ஹெல்ப் என்று கதறும் வீடியோ காட்சிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.