54 ஆண்டுகள் கழித்து பாரிஸிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த மர்ம அஞ்சல் அட்டை!
ஒரு அஞ்சல் அட்டை அரை நூற்ராண்டுகள் கழித்து பாரிசிலிருந்த வந்து சேர்ந்துள்ளது.
அஞ்சல் அட்டை
ஜெசிகா மீன்ஸ் என்ற பெண் போர்ட்லேண்ட் என்ற பகுதியில் ஆலன் அவென்யூ என்ற இடத்தில் 17 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கள் அன்று தனது அஞ்சல் பெட்டியைத் திறந்த போது அதில் விசித்திரமான ஒரு அஞ்சல் அட்டை இருந்தது. ஜெசிகா அதை எடுத்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார்.
அது அரை நூற்றாண்டுகள் பழமையான ஒரு அஞ்சல் அட்டையாக இருந்துள்ளது. ஜெசிகா இந்த அஞ்சல் அட்டை பக்கத்து வீட்டுக்காரருக்காக வந்தது என்று நினைத்துள்ளார். ஆனால் அது ஜெசிகாவின் முகவரியில் தான் வந்திருக்கிறது. இந்த அஞ்சல் அட்டை நீண்ட காலமாக ஜெசிகா வசிக்கும் வீட்டில் வசித்து இறந்த தம்பதியினருக்கு அனுப்பப் பட்டுள்ளது. இது இந்த வாரம் வீட்டை அடைந்துள்ளது.
இந்த அஞ்சல் அட்டை மார்ச் 15 1969 ஆம் ஆண்டு பாரீஸ் நகரில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அந்த அட்டையில் ராய் என்ற பெயரில் கையொப்பம் இடப்பட்டிருந்தது. இந்த அஞ்சலை பெறவிருந்த திருமதி ரெனே ஏ. காக்னன் என்ற பெயருக்கு கீழ் தற்போதைய குடியிருப்பாளர் என்று எழுதப்பட்டிருந்தது.
மர்மம்
அந்த அஞ்சலில் எழுதியிருந்ததாவது "அன்புள்ள நண்பர்களே, நீங்கள் இதை பெறுவதற்குள் நான் நீண்ட காலமாக வீட்டிற்கு வந்திருப்பேன். ஆனால் நான் இப்போது இருக்கும் டூர் ஈஃபிலில் இருந்து இதை அனுப்புவது சரியாக தெரிகிறது. வேடிக்கையாக இருங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஜெசிகா கூறுகையில் அந்த அஞ்சல் அட்டையில் புதிய யுனைடெட் ஸ்டேட்ஸ் ஸ்டாம்ப் ஒட்டியிருந்தது. ஜூலை 12 2023 என்று புதிய தேதியும் எழுதியிருந்தது மர்மமாகா இருக்கிறது என்று கூறுகிறார். இதை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.