54 பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது நபர் - நடுங்க வைத்த அதிர்ச்சி சம்பவம்
ஆஸ்திரேலியாவில் பெர்த் பகுதியை சேர்ந்தவர் ஆடெம் லுஸ்க். இவர் மீது இரண்டு பெண்கள் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தனர். அந்த புகாரில், ஆடெம் லுஸ்க் தங்களுக்கு போதை மருந்து கொடுத்து வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, இந்த வழக்கைப் பதிவு செய்த போலீசார், ஆடெம் லுஸ்க்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின்போது மேலும், 3 பெண்கள் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினர். விசாரிக்க, விசாரிக்க பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இவர் மீது அடுத்தடுத்து 33 பெண்கள் குற்றம் சுமத்தியதால் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
‘என்னடா லிஸ்ட் போய்ட்டே இருக்கிறதே...’ என்று போலீசார் இவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ஆடெம் லுஸ்க் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, நிர்வாணப்படுத்தி, அதை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு, அப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இவர் மீது குற்றம் சுமத்தியவர்களில் 9 வயது சிறுமி முதல் 13 வயதில் உள்ள சிறுமிகளும் அடங்குவர். இதுவரை ஆடெம் லுஸ்க் மீது 54 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் ஆடெம் லுஸ்க்கிடமிருந்து 54 பெண்களின் நிர்வாண படங்களை மீட்டுள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு ஜனவரி வரை ஆண்டிற்கு மட்டும் 10 பெண்களை அவர் கற்பழித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதியானால் இவருக்கு வாழ் நாள் முழுவதும் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
