24வயது பெண்ணுடன் 54வயது தொழிலாளி திருமணம்; திரும்பி வர சொன்ன உறவினர் - பெண் செய்த காரியம்!

Tamil nadu Marriage Salem
By Jiyath Sep 13, 2023 10:21 AM GMT
Report

சேலத்தில் 54 வயது நபர் 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

திருமணம்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே உள்ள மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதான கிருஷ்ணன். இவர் விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கிருஷ்ணன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

24வயது பெண்ணுடன் 54வயது தொழிலாளி திருமணம்; திரும்பி வர சொன்ன உறவினர் - பெண் செய்த காரியம்! | 54 Old Fell In Love With A 24 Old Graduate Girl

இந்நிலையில் கிருஷ்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த விமலா (24) என்ற பட்டதாரி பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த இருவரும் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர்.

காவல் நிலையத்தில் தஞ்சம்

இதுகுறித்து அறிந்த விமலாவின் தந்தை, தனது மகளை கிருஷ்ணன் கடத்தி சென்றதாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

24வயது பெண்ணுடன் 54வயது தொழிலாளி திருமணம்; திரும்பி வர சொன்ன உறவினர் - பெண் செய்த காரியம்! | 54 Old Fell In Love With A 24 Old Graduate Girl

இதனை அறிந்த கிருஷ்ணன்-விமலா, இருவரும் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். விமலாவின் உறவினர்கள் தங்களுடன் திரும்ப வர விமலாவை எவ்வளவோ கட்டாயப்படுத்தியும், அவர் அதை மறுத்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் மேஜர் என்பதாலும், காதல் கணவருடன் செல்வதாக விமலா கூறியதாலும், பெண்ணின் விருப்பப்படி கிருஷ்ணனுடன் விமலாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.