நேபாளத்தில் ஒலிக்கும் மரண ஓலம்.. கொத்து கொத்தாக மடிந்த உயிர்கள் - நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வு!
திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
திபெத்
நேபாளம் – திபெத் எல்லையில் இன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது. இது லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் நிகழ்ந்திருக்கிறது என யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியோலாஜிக்கல் சர்வே அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தது.
இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.அப்போது கட்டட இடிபாடுகளில் சிக்கி 53 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.தற்போது, இடிபாடுகளில் சிக்கி இருப்போரை மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் நிலநடுக்கத்தால் சீனாவிலும் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என அச்சம் அடைந்துள்ளனர்.இதனையடுத்து திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக பிகார், டெல்லி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம்
ஜிசாங் பகுதியில் மட்டும் மொத்தம் நான்கு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது.அதன்படி, முதலாவதாகக் காலை 5:41 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகவும், 2வது காலை 6:35 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது.
மேலும் மூன்றாவதாகக் காலை 7:02 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவான நிலையில் நான்காவதாகக் காலை 7:07 மணிக்கு 4.9 ஆகவும் பதிவானது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.