‘ஜாலி ஓ ஜிம்கானா...’ 53 பெண்களை திருமணம் செய்த மனிதர்

Viral Video Saudi Arabia Marriage
By Nandhini Sep 14, 2022 06:43 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

53 பெண்களை திருமணம் செய்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

53 பெண்களை திருமணம் செய்த நபர்

சவுதி அரேபியாவை சேர்ந்த அபு அப்துல்லா என்பவர் 53 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவருக்கு தற்போது 63 வயதாகிறது.

இது குறித்து அபு அப்துல்லா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது -

முதன்முதலில் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்கினோம்.. ஆனால், திடீரென எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. சண்டைகளும் அதிகமானது.

இதிலிருந்து விடுபட நான் 2-வது பெண்ணை திருமணம் கொண்டேன். ஆனால் 2-வது மனைவியுடனும் கருத்து வேறுபாடு வந்தது. ஆதலால் 3-வது திருமணம் செய்து கொண்டேன். இப்படியே ஒவ்வொரு மனைவியையும் விவாகரத்து செய்துவிட்டு, மொத்தம் 53 கல்யாணம் வரை செய்தேன்.

உடல் சுகத்திற்காக நான் இப்படி 53 திருமணம் செய்யவில்லை. நான் நிம்மதியாக இருக்கத்தான். நான் மணம் முடித்த அத்தனை பெண்களும் பேரழகு கொண்டவர்கள்.

53 marriage - viral video

8 மனைவிகளுடன் வாழ்க்கை 

தற்போது எனக்கு மொத்தம் 8 மனைவிகள் இருக்கிறார்கள். 8 பேரும் ஒரே வீட்டில் எந்த வித சண்டை சச்சரவும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் அத்தனை மனைவிகளும் தீவிரமாக காதலிக்கிறேன். 8 மனைவிகளும் கை நிறைய சம்பாதிக்கிறார்கள். சாயங்காலம் வீட்டுக்கு வந்து ஜாலியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் நான் படுத்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

தற்போது அபு அப்துல்லா பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.