‘இதெல்லாம் ரொம்ப ஓவரு’ - 12வது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் பாட்டி

america 12thmarriage
By Petchi Avudaiappan Dec 03, 2021 07:37 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அமெரிக்காவில் 52 வயது பாட்டி ஒருவர் 12வது திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வரும் தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. 

இந்தியாவில் ஒருவர் திருமணம் செய்வது என்பது மிகப்பெரிய செயல்முறையை கொண்டது. கிட்டதட்ட பிற்பாடு பாதி வாழ்க்கையை இல்லற துணையுடன் தான் கடக்க வேண்டும் என்பதால் இந்த விஷயத்தை மிகக் கவனமாக கையாள்வார்கள். 

ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் ஏற்கனவே 11 முறை திருமணம் செய்துவிட்டு தற்போது மீண்டும் திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளையை தேடி வருகிறார்.

தற்போது 52 வயதாகும் தனக்கு இதுவரை 28 திருமண புரோபோசல் வந்துள்ளதாகவும், தற்போது 57 வயதான ஜான் என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும், 2 ஆண்டுகளாக அவருடன் உறவில் இருந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த ஜான் யார் என்றால் ஏற்கனவே இவரை 2 முறை திருமணம் செய்து விவகாரத்து செய்தவர். தற்போது அவருக்கு மீண்டும் மோனாவை திருமணம் செய்ய விருப்பம் இருக்கிறதாம். தற்போது 12 முறையாக மீண்டும் ஜானை திருமணம் செய்ய போகிறாராம்.

மோனாவில் வாழ்வில் அவரது 5வது கணவர் தான் சிறந்த கணவராம், 6வது கணவர் நல்ல குணம் உள்ள கணவராம், அதனாலேயே தனது 6வது கணவரை இரு முறை திருமணம் செய்து கொண்டாராம்.

தனது 8வது கணவரை ஆன்லைனில் பேசி பழகி திருமணம் செய்து கொண்டாராம். தனது 10 கணவர் அவரது பள்ளி கால நண்பராம். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.