அ.தி.மு.க.வின் 51வது பொன்விழா - எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு பொன்விழா நிறைவையொட்டி, எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு
இன்று அ.தி.மு.க.வின் 51வது பொன்விழா இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.
பின்பு, அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்பு, அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். 51வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில், அங்கிருந்த அ.தி.மு.க.வினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.