515 முறை நில அதிர்வு..கொத்து கொத்தாக மடிந்த உயிர்கள் - நாட்டையே உலுக்கிய சம்பவம்!
திபெத்தில் மீண்டும் 515 முறை நில அதிர்வுகள் ஏற்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திபெத்
நேபாளம் – திபெத் எல்லையில் இரண்டு தினங்களுக்கு மின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஷிகாட்சே நகரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 126 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் நிகழ்ந்திருக்கிறது என யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியோலாஜிக்கல் அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த நிலநடுக்கத்தால் சீனாவிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜின்பிங்கின் உத்தரவின் பேரில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் முதலில் 7.1 புள்ளி என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
நில அதிர்வு
இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து 500-க்கும் அதிகமான முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகச் சீனாவின் நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, ஜனவரி 8-ந் தேதி காலை 8.00 மணி நிலவரப்படி, மொத்தம் 515 அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதில் 488 நிலஅதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 3.0 புள்ளிகளுக்குக் கீழே இருந்துள்ளது.
24 நில அதிர்வுகள் 3.0 முதல் 3.9 புள்ளிகள் வரையிலும், 27 நில அதிர்வுகள் 4.0 முதல் 4.9 புள்ளிகள் வரையிலும் பதிவாகி இருந்தனர். இந்த நிலையில் திபெத்தில் நேற்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.