தமிழகத்தில் விரைவில் 500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடு விழா - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் என மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
உயிர் பலிகளை தடுக்க வேண்டும் - அண்ணாமலை
நீண்ட காலமாக தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
டாஸ்மாக் மதுக்கடையில் வாங்கப்படும் மதுப்பாட்டில்களில் இறந்த நிலையில் பல்லி, பாசி மிதப்பதாக செய்தி வருவது அதிர்ச்சியளிக்கிறது. மதுரையில் டாஸ்மாக் மது குடித்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார் மற்றொரு நபர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவே உயிர் பலிகளை தடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
500 மதுபான கடைகள் மூடல்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும் என்றும், மூடப்படும் கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக கடைகளின் பட்டியல் வெளியாகும் எனவும், தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்,
சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.