50 வயது பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்த 31 வயது இளைஞன் - இறுதியில் நடந்த கொடூரம்
பூந்தமல்லி, குன்றத்தூரைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (50). கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவனை பிரிந்து 3 மகள்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார் கண்ணம்மாள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணம்மாள் வீட்டில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துக்கிடந்தார் கண்ணம்மாள்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து மகள்கள் கத்தி கூச்சலிட்டனர். அப்போது, ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கண்ணம்மாள் இறந்து கிடப்பதைப் பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதை அறிந்த குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு கண்ணம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், கண்ணம்மாளுக்கும், அவர் வேலைபார்க்கும் அதே நிறுவனத்தில் டிரைவராக பணிபுரியும் ராஜா (31) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இதனையடுத்து, அடிக்கடி கண்ணம்மாளை, ராஜா தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ராஜா கூப்பிடும்போதெல்லாம் கண்ணம்மாளும் சென்று உல்லாசத்தை அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணம்மாள் வீட்டுக்கு வந்த ராஜா, அவரை தன்னுடன் உல்லாசத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அதற்கு கண்ணம்மாள் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த சண்டையில், கண்ணம்மாள், ராஜாவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, கண்ணம்மாளை சராமரியாக குத்தி வயிற்றை கிழித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.
கண்ணம்மாள் இறந்ததை அறிந்த ராஜா அந்த இடத்தைவிட்டு ஓடியது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.