50 மாணவிகளை மிரட்டி உல்லாசம் அனுபவித்த ஆசிரியர் - சிக்கியது எப்படி?

Sexual harassment
By Thahir Nov 06, 2023 12:13 AM GMT
Report

அரியானாவில் அரசு பள்ளி தலைமையாசிரியர் 50 மாணவிகளை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்

அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் பள்ளியில் 50 மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல் செய்து தலைமறைவாக இருந்த அப்பள்ளியின் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

செய்முறைத் தேர்வுகளில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி, பள்ளி தலைமையாசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாக, 15 மாணவிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு 5 பக்க கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து கடந்த மாதம் 31-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ மற்றும் ஐபிசி 354-வது 354-வது பிரிவின் கீழ் உச்சனா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

தலைமையாசிரியர் கைது

50 மாணவிகளை மிரட்டி உல்லாசம் அனுபவித்த ஆசிரியர் - சிக்கியது எப்படி? | 50 Students Were Sexually Assaulted In Haryana

கடந்த 5 நாட்களாக தலைமறைவாக இருந்த குற்றம் சாட்டப்பட்ட பள்ளி முதல்வர், தற்போது டிஎஸ்பி அமித் பாட்டியா தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.