50 கிலோ எடையுள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடை - உத்தரவிட்ட நாடு

China Weather
By Sumathi Apr 12, 2025 05:56 AM GMT
Report

50 கிலோவுக்கு குறைவான எடை கொண்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சூறைக்காற்று

சீனா அடிக்கடி இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சூறைக்காற்று அதிவேகமாக வீச தொடங்கியுள்ளது. பெய்ஜிங், தியான்ஜின், ஹெபெய் மாகாணங்களில் சூறைக்காற்று பலமாக வீசி வருகிறது.

china

இதனால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுகின்றன. எனவே, பெய்ஜிங்கில் விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் 11 மணி நேரம்தான்; கடிகாரத்திலேயே 12 மணி கிடையாது - ஏன் தெரியுமா?

இந்த நாட்டில் 11 மணி நேரம்தான்; கடிகாரத்திலேயே 12 மணி கிடையாது - ஏன் தெரியுமா?

அரசு உத்தரவு

இந்நிலையில், ‛‛சீனாவில் பல மாகாணங்களில் மணிக்கு 150 கிலோமீட்டர் (93 மைல்) வேகத்தில் குளிர் காற்று வீச தொடங்கி உள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கிய இந்த சூறைக்காற்று வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) சீனாவின் பல மாகாணங்களை பாதிக்கலாம்.

50 கிலோ எடையுள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடை - உத்தரவிட்ட நாடு | 50 Kg Not Come Out From Homes China

மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும். 50 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள மக்கள் இந்த காற்றில் அடித்து செல்லப்படலாம். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சூறைக்காற்றுக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மங்கோலியா மற்றும் வடகிழக்கு சீனாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.