மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான விராட் கோலி - வேதனையில் ரசிகர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒரு மோசமான சாதனை படைத்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டது.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றில் 120 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 17 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சனிடம் 7வது முறையாக அவர் அவுட்டாகியுள்ளார். அதேபோல் சதமடிக்க முடியாமல் விராட் கோலி விளையாடும் 50வது போட்டி இதுவாகும்.
கடந்த 2 ஆண்டுகளில் 18 டெஸ்ட், 15 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பதே அந்த மோசமான சாதனை ஆகும்.
இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.